பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிலவரங்களை அறிய 'வாட்ஸ்அப்' எண்: சுகாதாரத்துறை வெளியீடு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:மொபைல் போன் வைத்துள்ள அனைவரும் கொரோனா நிலவரங்களை அறிந்து கொள்ள 'வாட்ஸ் அப் எண் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.கொரோனா தகவல்களை அறிந்து கொள்ள, 90131 51515 என்ற மொபைல் (வாட்ஸ்அப்) எண் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எண்ணுக்கு, 'Hi' என குறுந்தகவல் அனுப்பினால், கொரோனா குறித்த தகவல்கள் கிடைக்கும். அத்துடன் மத்திய அரசின் இலவச அழைப்பு மையம், அதன் உதவி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்கள் தெரியும்.அவற்றின் கீழ் ஒன்று முதல் ஆறு கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1.நம் நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த தற்போதைய நிலை, 2.கொரோனா என்றால் என்ன? 3.அறிகுறி என்ன? 4.எப்படி பரவுகிறது? 5.தடுப்பது மற்றும் அச்சத்தை போக்குவது எவ்வாறு? 06.எய்ம்ஸ் இயக்குனர்களின் உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.கொரோனா பாதிப்பு குறித்து, விளக்கம் தேவைப்பட்டால், அதற்கான எண்ணை டைப் செய்து அனுப்பினால், மறுநொடியே பதில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.மொபைல் போன் வைத்துள்ள அனைவரும் இச்சேவை பெற முடியும். எவ்வித கட்டணமும் இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கி சுகாதாரத்துறை அமைச்சகம் இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X