பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு; போலீசார் வழங்கி நெகிழ்ச்சி

Added : மார் 27, 2020
Share
Advertisement
 ஆதரவற்றோருக்கு உணவு; போலீசார் வழங்கி நெகிழ்ச்சி

அவிநாசி:அவிநாசியில் ஊரடங்கு அமலில் இருந்தும், வாகனங்களில் அங்குமிங்கும் செல்வோரால், பதட்டம் அதிகரித்திருக்கிறது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வீடுகளில் இருந்து, யாரும் வெளியே வராமல் இருக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. இருப்பினும், அவிநாசி ரோட்டில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், மக்கள் அங்குமிங்கும் பயணித்தபடியே உள்ளனர்; அவர்களால் பதட்டம் அதிகரிக்கிறது.கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், வாகன ஓட்டிகளை நிறுத்தி, எச்சரித்து, அனுப்பி வைக்கின்றனர். 'மருத்துவமனைக்கு செல்கிறோம்; காய்கறி வாங்க செல்கிறோம்; பால் வாங்க போகிறோம்' என, ஏதாவது ஒரு காரணத்தை வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, டூ வீலரில் பயணிக்கின்றனர்.வைரஸ் பரவலை தடுக்க, கண்டிப்பாக வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.அவிநாசி புதிய பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், ஆதரவற்ற நிலையில் தஞ்சம் புகுந்திருப்போருக்கு, உணவு பொட்டலம் வழங்கினர். அவர்களுக்கு முக கவசம் வழங்கி, பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசி பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கினர்.அதே போல், அவிநாசி பி.டி.ஓ.,க்கள் ஹரிஹரன், சாந்தி லட்சுமி மற்றும் கிழக்கு ரோட்டரி தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X