ஊரடங்கை மீறி திரிவோர் மீது மஞ்சள்நீர் தெறித்து எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி திரிவோர் மீது மஞ்சள்நீர் தெறித்து எச்சரிக்கை

Added : மார் 27, 2020
Share
ஊத்துக்கோட்டை:ஊரடங்கை மீறி சாலையில் திரியும் பொதுமக்களுக்கு, மஞ்சள் நீர் தெளித்து, இனி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரித்தனர்.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு, 24ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.மருந்து, பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற கடைகள்
 ஊரடங்கை மீறி திரிவோர் மீது மஞ்சள்நீர் தெறித்து எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை:ஊரடங்கை மீறி சாலையில் திரியும் பொதுமக்களுக்கு, மஞ்சள் நீர் தெளித்து, இனி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு, 24ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.மருந்து, பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற கடைகள் முழுவதும் மூட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும், சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதை பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, அண்ணாதுரை சிலை அருகில், போலீசார் நின்று சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். எதற்கு வெளியே வந்தீர்கள் எனக் கேட்டதற்கு, காய்கறி, பால் வாங்க என, ஒவ்வொருவரும் ஒரு காரணம் கூறினர்.பின், மஞ்சள் கரைசலை, வேப்ப இலையில் நனைத்து அவர்கள் மீது தெளித்தனர். இதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளிடம், இனி அரசு உத்தரவை மீறி நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X