கொலை செய்யப்பட்டது மனநலம் குன்றிய பெண்ணா? போலீசார் விசாரணை தீவிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை செய்யப்பட்டது மனநலம் குன்றிய பெண்ணா? போலீசார் விசாரணை தீவிரம்

Added : மார் 27, 2020
Share

பல்லடம்:கரைப்புதுாரில், எரித்து கொல்லப்பட்டது, அதே பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணா என, போலீசார் விசாரிக்கின்றனர்.பல்லடத்தை அடுத்த கரைப்பதுார் அண்ணா நகரில், 24ல், பெண் ஒருவரின் சடலம், எரிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள புதரில் கிடந்தது. டி.எஸ்.பி., முருகவேல் தலைமையில், 4 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.அதில், கொலையான பெண், அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.டி.எஸ்.பி., முருகவேல் கூறியதாவது:கொலை நடந்த அதே பகுதியில், விசைத்தறி தொழிலாளி ராமசாமி, வசித்து வருகிறார். அவரது மனைவி குமாரி, 52 என்பவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை காணவில்லை என, அவரது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.பிரேத பரிசோதனைக்கு பின், ரத்த மாதிரி எடுக்கப்பட்ட பின், கொலையானது குமாரியா என்பது உறுதி செய்யப்படும். கொலை செய்யப்பட்டது அவர்தான் என்பது உறுதியான பின், விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X