பொது செய்தி

தமிழ்நாடு

ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு நிவாரண நிதி: நிதி அமைச்சருக்கு, ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்;கொரோனாவால் நிதி நெருக்கடியில் தவிக்கும் ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு, உடனடியாக நிவாரண நிதி வழங்கி பாதுகாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, ஏழைகள் பயன்பெறும்வகையில், ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் திட்டங்களை அறிவித்தார்.அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், ஆயத்த ஆடை துறைக்கு கைகொடுக்கும் கூடுதல் அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அவர் அனுப்பிய கடிதம்:கொரோனாவால் ஆடை உற்பத்தி துறை முடங்கியுள்ளது. பணப்புழக்கம் இல்லாத இச்சூழலில், தொழில்முனைவோர், வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை திருப்பிச்செலுத்த, ஆறு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும்.ஏற்கனவே பாதிப்பில் உள்ள நிறுவனங்களால், தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை தொடர்ந்து வழங்க இயலாது. அரசு, நிவாரண தொகையை அறிவித்து, சம்பளமாக வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஆடைகளுக்கான தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது.ஏற்றுமதியாளர்களின் சிரமம், நஷ்டத்தை தவிர்க்கும்வகையில், ரிசர்வ் வங்கி, பார்வேர்டு புக்கிங்கிலிருந்து விடுபடுவதற்கு வழிவகை செய்யவேண்டும். ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்ட சலுகையை, ஏற்றுமதியாளர் வங்கி கணக்கில், தொகையாக வரவு வைக்கவேண்டும். முதலீடுகள் இல்லாமலும், கடன் செலுத்த முடியாமல், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், ஆயத்த ஆடை துறையினர் தவிக்கின்றனர்.எனவே, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, உடனடியாக நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட, 25 சதவீதம் கூடுதல் வங்கி கடன் வழங்கவேண்டும். வங்கி கடன் செலுத்தாத நிறுவனங்களின் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை ஓராண்டுக்கு தள்ளிவைக்கவேண்டும்.நிறுவனங்கள் மின்கட்டணம் செலுத்துவதில் மூன்று மாதம் விலக்கு அளிக்கவேண்டும். இவை நிறைவேறினால், ஆடை உற்பத்தி தொழிலையும், இந்த துறை சார்ந்த பல லட்சம் தொழிலாளர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X