தூய்மை பாதுகாவலரிடம் அநாகரிகமாக நடந்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூய்மை பாதுகாவலரிடம் அநாகரிகமாக நடந்தவர் கைது

Added : மார் 27, 2020
Share
பள்ளிக்கரணை:துாய்மை பாதுகாவலரிடம், அநாகரிகமாக பேசி, தள்ளி விட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து, தரம் பிரித்து, மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் உறுதுணையாக இருப்பவர்கள் துாய்மை பாதுகாவலர்கள்.இப்பணியில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கேவலமாக நினைக்கும் சிலர், அநாகரிகமான வார்த்தைகளில் பேசுவது, துச்சமாக மதிப்பது

பள்ளிக்கரணை:துாய்மை பாதுகாவலரிடம், அநாகரிகமாக பேசி, தள்ளி விட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து, தரம் பிரித்து, மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் உறுதுணையாக இருப்பவர்கள் துாய்மை பாதுகாவலர்கள்.இப்பணியில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கேவலமாக நினைக்கும் சிலர், அநாகரிகமான வார்த்தைகளில் பேசுவது, துச்சமாக மதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பாதிக்கப்பட்ட அவர்களில் பலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். அதற்கான உரிய தீர்வு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெருங்குடி மண்டலத்தில், துப்புரவு தொழிலாளியை அநாகரிகமாக பேசி தள்ளிவிட்ட, சமூக விரோத நபர் கைது செய்யப்பட்டார்.பெருங்குடி, ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 36; மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி. இவர் பள்ளிக்கரணை, மேரு நகர், நான்காவது தெருவில், சில நாட்களுக்கு முன் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்.அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், தன் வீட்டு வாசலில் குப்பையை அகற்றவில்லை எனக்கூறி, கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில், அவரை பெண் என்றும் பாராமல், அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, தள்ளியுள்ளார்.இத்தகவல் அறிந்து, மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தரப்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து, ஆனந்தனை கைது செய்தனர்.ஜாமினில் வெளிவந்த அவர், பாதிக்கப்பட்டவரிடம், காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.இதேபோல, மடிப்பாக்கம், பாலையா கார்டன், பிருந்தாவனம் தெருவில், செல்வி என்பவர் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, தரம் பிரித்து வைத்திருந்த குப்பையில், அதே தெருவைச் சேர்ந்த நபர் ஒருவர் பொறுப்பின்றி குப்பை கொட்டியுள்ளார்.இதை தட்டிக்கேட்ட துப்புரவு தொழிலாளியை மிரட்டி, அநாகரிகமாக பேசியுள்ளார். இது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X