பொது செய்தி

தமிழ்நாடு

இப்படி செய்தால் கொரோனா தாக்காது! இதோ பாதுகாப்பு 'டிப்ஸ்'

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை;'இப்ப என்ன... தமிழ்நாட்டுல கொஞ்சம் பேருக்கு கொரோனா வந்துருக்கு. காலரா, அம்மைன்னு பல நோய விரட்டி அடிச்ச நம்மள, இந்த கொரோனா என்ன பண்ண போகுது...மோடி உத்தரவு போட்டா நாங்க கேட்கணுமா...'- இப்படி பலதரப்பட்ட அலட்சிய பதில்களை நம் வீடுகளிலும், வீதிகளிலும் கேட்க முடிகிறது. இந்த அலட்சிய பதில்களுக்கான விலையைத்தான் இத்தாலியும், அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளும், இன்று கொடுத்து வருகின்றன. கொரோனா பாதிப்பின் வீரியம் உணர்ந்தே, அரசு 144 தடையுத்தரவு போட்டுள்ளது. 'நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என, ஒருவர் அறிந்துகொள்ளும் முன்பே, ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரப்பி விடுவோம்' என்பதே, இதன் மிகப்பெரிய சவால். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை, உணர வேண்டிய தருணம் இது. வீட்டிற்குள் பல நாட்கள் இருக்க வேண்டும் என்றால் சிரமம் தான். ஆனால், வேறு வழியில்லை. அதே சமயம், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல வேண்டும். அதுபோன்று வெளியேறும் சமயங்களில், பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யலாம்...? இதோ சில டிப்ஸ்...!n வெளியிடங்களுக்கு செல்ல, குடும்பத்தில் ஒருவரை மட்டும் தேர்வு செய்யுங்கள். அவரை தவிர வேறு யாரும், எதற்கும் வெளியில் செல்லக்கூடாது. அடிக்கடி செல்வதை தவிர்த்து, திட்டமிட்டு ஒரு முறை சென்று, அனைத்தும் வாங்கி வாருங்கள்.n கடைக்காரரின் தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு, செல்வதற்கு முன்பே தேவையான பட்டியலை சொல்லி விடுங்கள். பொருட்கள் தயாரானதும் சென்று எடுத்து வாருங்கள். n வெளியிடங்களுக்கு செல்ல ஒரே ஆடையை பயன்படுத்துங்கள். அதை பிற ஆடைகளுடன் சேர்த்து வைக்காமல் தனித்து வையுங்கள்.n ஒரே கைப்பை, ஒரே வாகனம் போன்றவற்றை பயன்படுத்துங்கள். வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்லும் சாவி, பை, பணம் போன்றவற்றை தனித்து வையுங்கள்.n கதவுகளை திறக்கவும், 'லிப்ட்' பட்டன்களை அழுத்தவும் முழங்கை, உள்ளங்கை மற்றும் பின்புற பகுதிகளை பயன்படுத்தவும். n பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை, பாது காப்பாக அப்புறப்படுத்துங்கள். துவைத்து பயன்படுத்தும் முகக்கவசங்களை, வீட்டுக்கு வந்ததும் சோப்பு தண்ணீரில் நனைத்து, அலசி வெயிலில் போட்டு விட்டு; கை, கால்களை சுத்தம் செய்த பின், வீட்டுக்குள் உள்ளே நுழையுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X