பொது செய்தி

தமிழ்நாடு

நக்சல் ஸ்ரீமதி நீதிபதி வீட்டில் ஆஜர் ஏப்., 24 வரை காவல் நீட்டிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:பெண் நக்சல் ஸ்ரீமதி, எட்டு நாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு பிறகு, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.கோவை, ஆனைகட்டி சோதனை சாவடி பகுதியில், 'கியூ' பிரிவு போலீசார் கடந்த 11 ல், நடத்திய வாகன சோதனையின் போது, பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி,25, கைது செய்யப்பட்டார்.கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீமதியிடம், 10 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கோரி, 'கியூ' பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.அவரை எட்டு நாட்கள், போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதியளித்து, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். எட்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு, மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை, ரெட்பீல்டிலுள்ள மாவட்ட நீதிபதி இல்லத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். ஏப்., 24 வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து, உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X