பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணகி நகரில் 7,000 குடும்பங்கள் ரூ.1,000, ரேஷன் உதவிக்காக ஏக்கம்

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கண்ணகி நகர்:ரேஷன் கார்டு இல்லாததால், 7,000 குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த, 1,000 ரூபாய் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் தலையிட்டு, உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, கண்ணகி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓ.எம்.ஆர்., கண்ணகி நகர் முழுவதும், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள பயனாளிகளில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தொழில் நிமித்தமாக வேறு இடங்களில் வசித்து, இந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும், சில ஆயிரம் பேர், விற்பனை செய்துள்ளனர். இந்த வகையில், 7,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக, அதே முகவரியில், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளது; ரேஷன் கார்டு இல்லை.அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், 1,000 ரூபாய், இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கண்ணகி நகரில் உள்ள, 7,000 குடும்பங்கள் இதை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கண்ணகிநகர் பகுதிமக்கள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால், வேலை இல்லாமல், வீட்டில் முடங்கி கிடக்கிறோம். அரசு வழங்கும் உதவியை பெற, ரேஷன் கார்டு தேவை. பல முறை விண்ணப்பித்தோம். வீடு ஒதுக்கீடு ஆவணம் இருந்தால் தான், ரேஷன் கார்டு கிடைக்கும் என, அதிகாரிகள் கூறினர். எங்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்தி, தற்போது அறிவித்துள்ள பணம், ரேஷன் பொருட்கள் கிடைக்க, தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202015:49:24 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அவர்களை எல்லாம் ஊரின் எல்லைக்கு துரத்திவிட்ட பெருமை திமுகவையே சேரும். மக்கள் மக்களுக்குள் உதவி செய்ய முன்வருவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X