சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement
வடவள்ளி:தொண்டாமுத்துார், வடவள்ளி பகுதிகளில், 144 தடை உத்தரவை மீறி, வெளியில் சுற்றித் திரிந்த, 8 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியதாக, கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சந்திரன், 25, அபிராமி நகரை சேர்ந்த சங்கர், 32, கேகே புதுாரை சேர்ந்த

வடவள்ளி:தொண்டாமுத்துார், வடவள்ளி பகுதிகளில், 144 தடை உத்தரவை மீறி, வெளியில் சுற்றித் திரிந்த, 8 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியதாக, கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சந்திரன், 25, அபிராமி நகரை சேர்ந்த சங்கர், 32, கேகே புதுாரை சேர்ந்த பாலகிருஷ்ணன், 60, கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த சந்திரசேகர், 21, சுண்டபாளையத்தை சேர்ந்த, அலெக்ஸ் பாண்டியன், 32, குரும்பபாளையத்தை சேர்ந்த ரமேஷ் குமார், 19, ஸ்ரீராம் கார்டனை சேர்ந்த பார்த்திபன், 21 ஆகிய 7 பேர் மீது, வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல் தொண்டாமுத்துார் போலீசில், மல்லிகை நகரை சேர்ந்த செந்தில்குமார், 40, உள்ளிட்ட, 8 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தடையுத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X