பொது செய்தி

தமிழ்நாடு

பிரீமியம் தொகையை செலுத்த கூடுதல் அவகாசம்; தபால்துறை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை செலுத்த, வரும் ஏப்.,30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதுஇதுகுறித்து, அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை செலுத்த, வரும் ஏப்., 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.அவசரகால சூழலில், காப்பீடு திட்டங்களிலிருந்து முதிர்வு தொகை மற்றும் லோன் வேண்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு, தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X