பொது செய்தி

தமிழ்நாடு

'சானிடைசர்' தெளிப்பு பணி: 1,200 பேருக்கு கவசம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சென்னை;சென்னையில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, 1,200 பணியாளர்களுக்கு முழு கவசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 'பவர் ஸ்பிரேயர், ஜெட்ராடிங்' என, 500 இயந்திரங்கள் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த துாய்மை பணிகளுக்கு, 4,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இதில், முதற்கட்டமாக, 1,200 பணியாளர்களுக்கு, 'ஷூ, கையுறை, முக கவசம் உள்ளிட்ட, ஆறு உபகரணங்களுடன், முழு உடல் கவசம், மண்டலம் வாரியாக வழங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, முழு உடல் கவசம் வழங்கப்படுகிறது. இதில், ஒரு முழு கவசத்தின் விலை, 1,100 ரூபாய் வீதம், 13.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. முழு கவசம் வாயிலாக, பணியாளர்களுக்கு, கொரோனா பரவாமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X