பொது செய்தி

தமிழ்நாடு

யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவது யாருக்கு? பத்திர பதிவு ஆபீஸ்கள் மூடாததால் ஊழியர்கள் அவதி

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:பத்திரப்பதிவு செய்வதற்கு யாருமே வருவதில்லை. இருந்தாலும், 'அத்தியாவசிய பணி' என கூறி, கோவையில் உள்ள அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. கடும் சோதனைக்கு உட்பட்டு, அலுவலகத்துக்கு நடந்து வரும் ஊழியர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.கோவையில், மாவட்ட பதிவாளர் நிலை அந்தஸ்தில், 4 பத்திரப்பதிவு அலுவலங்கள் மற்றும், 13 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. 1,300 பதிவு பெற்ற பத்திர எழுத்தர்கள் இருக்கின்றனர்.சொத்து கிரையம் செய்தல், பாகப்பிரிவினை செய்தல், வில்லங்கச் சான்று வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு, தினமும், நுாற்றுக்கணக்கானோர் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வருகின்றனர்.'டாஸ்மாக்' மது வியாபாரத்துக்கு அடுத்ததாக, பத்திரப்பதிவு மூலமாக, ஆண்டுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.அதன் காரணமாகவோ என்னவோ, 'கொரோனா' வைரஸ் பரவி வரும் நெருக்கடியான இவ்வேளையிலும் கூட, 'அத்தியாவசிய பணி' என கூறி, பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைத்திருக்கிறது, தமிழக அரசு.'நோய் தொற்று பரவி விடும்; வீட்டை விட்டு வெளியே வராதே; தனித்திரு; விழித்திரு' என்கிறார், தமிழக முதல்வர் பழனிசாமி.அதேநேரம், பத்திரம் பதிவு செய்ய வரலாம்; அலுவலகம் திறந்திருக்கிறது; ஊழியர்கள் இருக்கிறார்கள் என்கிறது, கோவை மாவட்ட நிர்வாகம்.இவ்விஷயத்தில், மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது அரசு? நோய் தொற்று பரவலாகி, இறந்து விடலாம்; இப்போதே சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எழுதி வையுங்கள் என அர்த்தம் கொள்வதா, என்கிற கேள்வி எழுந்துள்ளது.தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருந்தாலும், மாவட்ட பதிவாளரோ, சார் பதிவாளரோ வருவதில்லை. பத்திரப்பதிவும் நடப்பதில்லை. ஆனால், ஊழியர்கள் மட்டும் வருகின்றனர்; அலுவலகம் திறந்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.அதன் காரணமாக, அலுவலர்கள் பலர், தொலைதுாரத்தில் வீடு இருந்தாலும், அலுவலகத்துக்கு நடந்தே வருகின்றனர். இடைப்பட்ட பகுதிகளில், போலீசார் தடுத்து நிறுத்தி, ஏகப்பட்ட கேள்விகளை கேட்கின்றனர்.அவர்களுக்கு பதில் சொல்லி சமாளித்து, அலுவலகத்துக்கு ஊழியர்கள் வருவதற்குள் ஒருவழியாகி விடுகின்றனர். பத்திரப்பதிவு ஊழியர்கள் அனைவரும், மனஉளைச்சலில் இருக்கின்றனர்.நோய் தொற்று இவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், ஊரடங்கு முடியும் வரை, இத்துறையினருக்கும் விடுப்பு அறிவித்து, அலுவலகங்களை மூட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது அரசு? நோய் தொற்று பரவலாகி, இறந்து விடலாம்; இப்போதே சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எழுதி வையுங்கள் என அர்த்தம் கொள்வதா, என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X