'கொரோனா' எச்சரிக்கை ஸ்டிக்கர்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

Added : மார் 27, 2020
Share
Advertisement

பேரூர்:'கொரோனா' எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகள் குறித்து, சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுவதால், சம்பந்தப்பட்டவர்கள் வேதனையடைகின்றனர்.ஒரு மாதத்துக்குள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளின் முன், 'கொரோனா தொற்று உள்ளே நுழையாதே; தனிமைப்படுத்தப்பட்ட வீடு' எனும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.ஸ்டிக்கரில், வெளிநாடு சென்றவரின் பெயர், அந்த வீட்டில் வசிப்போரின் எண்ணிக்கை, ஊரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.இது, வெளிநபர்கள், அவர்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாகவே ஒட்டப்படுகிறது.இதை தவறாக புரிந்து கொள்ளும் சிலர், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என கருதி, எச்சரிக்கை ஸ்டிக்கரை போட்டோ எடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் பீதியடைகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்டிக்கர் ஒட்டுவதால், வீட்டில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அர்த்தமல்ல. வெளிநாடு சென்று திரும்பியதால், அனைவரின் பாதுகாப்பு கருதியே, எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இதை சிலர், தவறாக புரிந்து கொள்கின்றனர். இது போன்ற செயல்கள், சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை வரும் நாட்களில் பாதிக்கும். அது போன்று, பேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X