பொது செய்தி

தமிழ்நாடு

22 மாடி வணிக வளாகம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சென்னை, அரும்பாக்கத்தில், 22 மாடி வணிக வளாகம் கட்டுவதற்கான திட்டத்தில், அடுத்த கட்ட பணிகளை வீட்டுவசதி வாரியம் துவக்கிஉள்ளது.
சென்னையில், பல்வேறு இடங்களில், காலி நிலங்களை தேர்ந்தெடுத்து, புதிய வணிக வளாகங்களை, வீட்டு வசதி வாரியம் கட்டி வருகிறது. இவ்வகையில், பெசன்ட் நகர், அசோக் நகர், அண்ணா நகர் பகுதிகளில், பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இதில், புதிய முயற்சியாக, அரும்பாக்கத்தில், 22 மாடி வணிக வளாகம் கட்டுவதற்கு, 2019ல் திட்டமிடப்பட்டது. இரண்டு அடித்தளம், தரைதளத்துடன், 22 மாடிகள் கொண்டதாக, இந்த வளாகம், 204 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, இதில் கட்டுமான திட்ட பணிகளுக்கான நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.இதற்கான, 'டெண்டர்' கோரப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில், இதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X