சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர் சுற்றிய 134 பேர் கைது :இனி வாகனங்களும் பறிமுதல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி, வாகனம் ஓட்டிய, 134 பேரை போலீசார் கைது செய்தனர்.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒலி பெருக்கிகள் மூலம், அறிவிப்புகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், தடையை மீறி வாகனங்களில் சென்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். முறையான காரணங்களை கூறியவர்களை, எச்சரித்து அனுப்பிய போலீசார், பிறர் மீது நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு பகுதிகளிலும், வாகனங்களில் சுற்றிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்.தடையை மீறியதாக, கோவை மாநகரில் 25 வழக்குகள், 37 பேர், மாவட்டத்தில், 79 வழக்குகள், 97 பேர் என, மொத்தம், 104 வழக்குகளில், 134 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், தடையை மீறுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது வழக்கு பதிவு செய்வதோடு, வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X