பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி மருத்துவமனைகள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இதுதவிர, மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஐந்து மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி சார்பில், 32 மகப்பேறு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன. ஏழை எளிய மக்கள், இம்மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.'கொரோனா' வைரஸ் பரவுவதால், மற்ற அரசு தறை அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், படுமும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.மாநகராட்சி மருத்துவமனைகள், 24 மணி நேரமும் செயல்படுகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்குள் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள், கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கின்றனர். அவர்களது வீட்டில், 'தனிமைப்படுத்திய வீடு' என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.ஆனாலும், அவர்கள் வெளியே நடமாடுவதாக, மாநகராட்சிக்கு புகார் வருகிறது. அச்சமயத்தில் நேரடியாக சென்று, சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்று இருப்பதாக சந்தேகத்துக்கு உட்பட்டால், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, அரசு மருத்துவனையில் அனுமதிக்க வேண்டும்.பரிசோதனையில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானால், சிங்காநல்லுாரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக, கோவை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.புகார் சொல்லப்படும் இடத்துக்கு, இக்குழுவினர் சென்று, சிகிச்சை அளிக்கின்றனர். இக்குழுவில், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று ஒரே நாளில், 20 வீடுகளுக்குச் சென்று, பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X