பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, கோவை, மதுரையில் நடமாடும் காய்கறி கடைகள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சென்னை 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் ஒன்று சேருவதை தவிர்ப்பதற்காக நகரப் பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகள் நடத்த தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் சாலைகளிலும் மார்க்கெட்டுகளிலும்மக்கள் நடமாட்டம் தொடர்கிறது.காய்கறிகள், கீரைகள், மருத்துவ குணம் நிறைந்த பூண்டு, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.எனவே பொது மக்கள் நலன் கருதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை , திருநெல்வேலி உள்ளிட்ட நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகளைதோட்டக்கலை துறையினர்துவங்கவுள்ளனர்.தோட்டக்கலை துறை வளர்ச்சி முகமைக்கு அரசு வழங்கியுள்ள வாகனங்கள் வாயிலாக இவற்றின் விற்பனை நடக்க உள்ளது.சென்னை நகரில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் மூன்று நடமாடும் கடைகள் ஓரிரு நாட்களில் செயல்பட உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் பொது மக்கள் வசிக்கும் முக்கிய சாலைகள் வழியாக இந்த நடமாடும் காய்கறி கடை வாகனங்கள் வலம் வரவுள்ளன.மொத்த விலைக்கே இந்த வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்யும்படி வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர்உத்தரவிட்டுள்ளனர்.ஒவ்வொரு நடமாடும் காய்கறி வாகனத்திலும் தோட்டக்கலைத் துறை வளர்ச்சி முகமைஅலுவலர் உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த இரண்டு விவசாயிகள் இடம்பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X