பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
actor,sethuraman,died,cardiac_arrest,சேதுராமன்,சேது

சென்னை: நடிகரும், டாக்டருமான சேதுராமன் நேற்று(மார்ச் 26) இரவு மாரடைப்பால் காலமானார்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் தோல் சிகிச்சை டாக்டருமான சேதுராமன், 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சினிமாவிலும் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இளம் வயதிலேயே நேற்று(மார்ச் 26) அவர் மாரடைப்பால் காலமானார். இது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


latest tamil newsசேதுராமன் இறந்ததை நடிகர் சதீஷ், தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், 'நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
27-மார்-202015:03:40 IST Report Abuse
Ashanmugam உண்மையிலே ஜீரணிக்க முடியாத ஓர் துயரமான சம்பவம். சினிமா துறைக்கும் மட்டும் இல்ல.‌மருத்துவ துறைக்கும் பேரிழப்பு. நல்ல மனிதர் சாதிக்க வேண்டிய வயதில் அகால மரணம் அடைந்திருப்பது தமிழ் பட உலகில் எல்லோரையும் கண்ணீரில் முழ்கி விட்டது.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
27-மார்-202014:35:27 IST Report Abuse
s t rajan மிகுந்த துயரம் அளிக்கிறது. அதுவும் நன்கு (MD)படித்த smart looking Doctor உயிரோடு இருந்தால் எத்தனை உயிர்களை காப்பாற்ற முடியும். இறைவா.... என்ன கொடுமை ?
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-மார்-202014:32:41 IST Report Abuse
தாண்டவக்கோன் Tragic death. Autopsy report என்னெ சொல்லுதாம் 🤔
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
29-மார்-202009:39:16 IST Report Abuse
Karunanunnatural deathukkuthan autopsy புரிஞ்சுதா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X