பொது செய்தி

தமிழ்நாடு

வெளியே நடமாடினால் ஆறு மாத சிறை தண்டனை!

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினால், 6 மாதம் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும். இந்த விவரம் தெரியாமல் பலரும் வெளியில் நடமாடி வருகின்றனர்.கொரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்துவது, 1897ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட, தொற்று நோய்கள் தடுப்புச்சட்டம்.இந்த சட்டம், அப்போதைய பம்பாய் மாநகராட்சியில், பிளேக் நோய் பரவியதை தடுக்கும் நோக்கத்துடன், முதல் முறையாக கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி, ஊரடங்கு உத்தரவு நடைமுறையை அமல் செய்யலாம்.நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் காலரா, மலேரியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவிய போதெல்லாம், இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.சரி... இச்சட்டம் சொல்வது என்ன?நாட்டில் தொற்றுநோய் பரவும்போது, சட்டத்தின் சாதாரண பிரிவுகள் பயனற்ற நிலையில் இருக்கும்போது, இத்தகைய சிறப்பு சட்டப்பிரிவுகளை, அரசு நியமிக்கும் அதிகாரிகள் பயன்படுத்தலாம். இதன் மூலம் நோய் பரவுதலை தடுக்க, எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முடியும்.இதன்படிதான், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, தேவையான கடும் நடவடிக்கை எடுத்து, கொரோனாவை தடுக்கும்படி, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதை மீறுபவர்களுக்கு, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ன்படி, ஆறு மாத சிறை தண்டனை விதிக்க முடியும். அமல் செய்யும் அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு அளிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அரசு உத்தரவை மீறுவோருக்கு, அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.முனைவர் ஜெயச்சந்திரன்மூத்த குற்றவியல் வக்கீல், கோவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X