பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி சாம்பார், பொரியலேதான் வேணுமா! ஊரடங்கால் பயறு குழம்பும் பழகிக்கலாம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 காய்கறி சாம்பார், பொரியலேதான் வேணுமா! ஊரடங்கால் பயறு குழம்பும் பழகிக்கலாம்

கோவை;ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தாலும், காய்கறி வாங்குவதற்காக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்திருக்கின்றனர்.ஏப்., 14 வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால், இறைச்சி, மருந்து கடைகள் கிடைக்கின்றன.என்னதான் இவை தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், தடியுடன் நிற்கும் போலீசை சமாளித்து, காய்கறி வாங்க வெளியே சென்றாக வேண்டும் என்பதுதான் இப்போதைய பெரிய சவால்.இப்படி டிரை பண்ணலாம்!துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சாம்பார் வைக்கலாம். கொள்ளு ரசம் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியவை; காய்கறி தேவையில்லை.தட்டைப்பயறு குழம்பு, மொச்சை பயறு குழம்பு, சுண்டல் குழம்பு, பாசிப்பயறு கடைசல், பருப்பு கடைசல், சட்னிக்கு தேங்காய் இல்லை என்றால், நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னி என, காய்கறி இல்லாமல், ஏராளமான சட்னி வகைகள் தயாரிக்கலாம்.கொழுக்கட்டை, ராகி கூழ்!சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, ரவா உப்புமா, சந்தகை, கொழுக்கட்டை, இனிப்பு பணியாரம், காரப்பணியாரம், சோள தோசை, ராகி கூழ், கம்மங்கூழ் என, தயாரித்து சாப்பிடலாம்.மீதமாகும் இட்லியை குப்பையில் வீசாமல், இட்லி உப்புமா தயாரிக்கலாம். தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என விதம் விதமாக தயாரித்து ருசிக்கலாம். சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ஒரு மாதத்தை கடந்தும் பயன்படுத்தலாம். இவற்றை, அடுத்த மாதம் பயன்படுத்த வைத்திருந்து, மற்ற பொருட்களை கொண்டு, உணவு தயாரிக்கலாம் என்கின்றனர் சில சமையல்கலை நிபுணர்கள்.எகிறுது காய்கறி விலை! தக்காளி - ரூ.30-40சின்ன வெங்காயம் - ரூ.100பெரிய வெங்காயம் - ரூ30கேரட் - ரூ.70முட்டைகோஸ் - ரூ.60பீட்ரூட் - ரூ.40ஒரு தேங்காய் - ரூ.25-30தர்பூசணி கிலோ - ரூ.15திராட்சை அரை கிலோ - ரூ.60ஆரஞ்சு கிலோ - ரூ.60முலாம்பழம் - ரூ.40ஆப்பிள் - ரூ.120

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X