பொது செய்தி

தமிழ்நாடு

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் இது நம்ம மோடி சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது!

Added : மார் 27, 2020
Share
Advertisement

வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்; விழித்திருங்கள் என கூறுவதன் அர்த்தம் புரியாமல், இன்னும் பலர், வெளியே உலா வருகின்றனர். நோய் தொற்று வீரியத்தை, இனியாவது புரிந்து கொண்டு, வீட்டுக்குள் அடங்கி இருப்பதே அனைவருக்கும் நல்லது. தவறினால் உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் யாராக இருந்தாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.கடந்த ஒரு மாதத்துக்குள், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.இவர்களது வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, ஸ்டிக்கரும் ஒட்டப்படுகிறது. என்றாலும் கூட, அவர்கள், 'எங்களுக்கு காய்ச்சல் இல்லை; நன்றாகத்தான் இருக்கிறோம்' என கூறி, நகரில் ஹாயாக உலா வருகின்றனர்.n வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாவட்டங்களுக்கோ சென்று வந்திருந்தால், உங்கள் உடமைகளை நடுவீட்டில் போட்டு விட்டு, பயண களைப்பில் சேரிலும், படுக்கையிலும் சாயாதீர்.n வீட்டுக்குள் நுழையும் முன், உடமைகளை வெளியே வையுங்கள். அதை, குடும்பத்தாரை தொட அனுமதிக்காதீர். நீங்களே ேஹண்டில் செய்யுங்கள்.n கைகளை சோப்பு அல்லது சானிட்டைசரால் கழுவி, குளித்து விட்டு, துணியை துவைத்து தனியே காயப்போடுங்கள். உங்கள் குடும்பத்தினரை செய்ய வைத்து, குடும்பத்தினர் துணிகளுடன் கலந்து, நோயை பரப்பாதீர்.n வீட்டில் அனைத்து அறைகளையும் பயன்படுத்தாமல், ஒரே ஒரு அறையில் மட்டும் இருங்கள். தண்ணீர் குடிக்கக்கூட, பிற அறைகளுக்கு செல்லாதீர்.n உங்களை பற்றி, ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ, தாமாக முன்வந்து, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அரசும், டாக்டர்களும் சொல்வதை கேளுங்கள்.n வயது வித்தியாசமின்றி, அனைவரும் சுடுதண்ணீர் குடியுங்கள். ஐஸ்கிரீம், குளிர்பானம், பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை தவிர்த்திடுங்கள். இவற்றால் சாதாரண சளி ஏற்பட்டாலும், வீண் பயமும், பீதியும் உண்டாகும்.n சாதாரண சளி தான்! நான், 'ஸ்டீல் பாடி'; எனக்கு ஒன்றும் ஆகாது. நானெல்லாம் மாத்திரையே சாப்பிட மாட்டேன் என, வீம்பு பேசித் திரியாதீர். உங்கள் உடலுக்கு வேண்டுமானால், சாதாரண சளி என கருதி, கடந்து விடலாம். உங்களிடம் இருந்து நோய் கிருமியை வாங்குபவர்களுக்கு, சாதாரணமாக கடந்து விடாது. அது, அவர்களின் உயிரை பறிக்கலாம்.n உங்களுக்கு சளியோ, காய்ச்சலோ, இருமலோ இல்லாமல் இருக்கலாம். அதற்காக, நோய் தொற்று இல்லை என்று அர்த்தமில்லை. நோய் கிருமி உடலுக்குள் நுழைந்தபின், அறிகுறி தெரிய, 2 முதல், 15 நாட்களாகும்.இதையே, 'இன்குபேஷன் பீரியட்' என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அறிகுறி தெரிந்தால் மட்டுமே அடங்குவேன் என திரிந்தால், இன்குபேஷன் பீரியட்டில் போகும் இடமெல்லாம், கிருமியை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.ஆகவே... உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நன்மையே...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X