பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு பணிக்கு நன்கொடை வழங்கலாம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், கோவை மாநகராட்சிக்கு சி.எஸ்.ஐ., நிதி அல்லது நன்கொடை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணிக்கு, சமுதாய பொறுப்பு நிதி மற்றும் நன்கொடை நிதி வழங்க முன்வரும் நிறுவனங்கள், பொதுமக்கள், City Municipal Corporation என்ற பெயரில், காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் கொடுக்கலாம். அல்லது, இணைய வழியிலும் பணம் அனுப்பலாம்.இணைய வழியில் அனுப்பும்போது, COMMISSIONER, COIMBATORE CITY MUNICIPAL CORPORATION என்ற பெயருக்கு, இந்தியன் வங்கி கணக்கு - 6872477012 என்ற எண், எம்.ஐ.சி.ஆர்., எண் - 641019029, ஐ.எப்.எஸ்.சி., எண் - IDIB000C114 என்ற எண்ணுக்கு நிதி அனுப்பலாம்.மேலும், விவரங்களுக்கு, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை, 0422 - 230 2323 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X