பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, வீடாக சென்றால் நோய் தொற்றாதா?

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்குவதற்கு பதில், கார்டுதாரர் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.ஊரடங்கு இருந்தாலும், அத்தியாவசிய பணி என்பதால், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. வரும் ஏப்., மாதத்துக்கான அத்தியாவசிய பெருட்கள் ஒதுக்கீடு, ஒவ்வொரு கடைக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.அதில், அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, ஒவ்வொரு கார்டுதாரர் வீட்டுக்கும் சென்று, டோக்கன் வழங்க, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது, சாத்தியமில்லாத நடைமுறை. ஒவ்வொரு கடையிலும், குறைந்த பட்சம், 1,000 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.அவ்வளவு கார்டுதாரரின் வீடுகளை, ரேஷன் கடை ஊழியர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அனைத்து வீடுகளுக்கும் தெரு தெருவாக, அவ்வூழியர் சென்றால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அனைத்து கார்டுதாரரின் மொபைல் போனுக்கும், பொருள் வாங்கியதும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அது போல், ஒவ்வொரு கார்டுதாரருக்கும் நேரம் குறிப்பிட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, வாங்கிக் கொள்ள வலியுறுத்தலாம் என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.'முகக்கவசம், கிருமிநாசினிவழங்க வேண்டும்'தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கும் முறையை கைவிட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முக கவசம் அளிக்க வேண்டும். பொருள் வாங்க வரும் கார்டுதாரர்கள் கைகளை கழுவ, தண்ணீர், சோப்பு அல்லது கிருமி நாசினி போன்றவை வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X