பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பொருட்கள் விற்பனையும் உண்டு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:தடையின்றி பால் வினியோகம் இருக்கும் நிலையில், ஆவினின் பிற உணவு பொருட்களான, நெய் மற்றும் பால்கோவா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் நடக்கிறது, என, ஆவின் விற்பனை மேலாளர் சங்கீதா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், மக்கள் பால் கிடைக்காமல் அவதிப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக, பால் அனுப்பப்படுகிறது.விற்பனையாளர்கள் முறையாக வினியோகித்து வருகின்றனர். இவர்களிடம் பெற முடியாதவர்கள் மற்றும் கூடுதல் பால் வேண்டுவோர், மண்டல் அலுவலகங்களை மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு, பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாலுடன், ஆவின் நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், இவை கிடைக்காது என, வாடிக்கையாளர்கள் எண்ண வேண்டாம்.பாலுடன் வழக்கம்போல் இவற்றின் விற்பனையும் நடந்து வருகிறது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.பால், நெய், பால்கோவா கிடைக்கவில்லையாஆவின் பால், நெய், பால்கோவா உள்ளிட்ட ஆவினின் உணவு பொருட்கள் கிடைக்காவிட்டால், கிழக்கு மண்டலம் - 94890 43713, மேற்கு மண்டலம் - 94890 43711, வடக்கு மண்டலம் - 98422 44750, தெற்கு மண்டலம் - 96774 94172 ஆகிய எண்களுக்கோ அல்லது விற்பனை மேலாளரை, 94890 43715 என்ற எண்ணுக்கோ, தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X