கொரோனா பாதிப்பு புரியலை... தெனாவெட்டு நபர்கள் அடங்கலை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு புரியலை... தெனாவெட்டு நபர்கள் அடங்கலை!

Added : மார் 27, 2020
Share

போத்தனூர்:போலீசார் எச்சரிக்கை விடுத்தும், குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே சுற்றுவோரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஏப்.,14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் மருத்துவ உதவிக்காக செல்வோர் தடுக்கப்படுவதில்லை.இதனை பயன்படுத்தி பலர், ஹாயாக வெளியே சுற்றுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார், 'கவனிக்க' வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கும் கட்டுப்படாமல் பலர் வெளியே வருகின்றனர்.ஒரே இடத்தில் கும்பல் சேரவேண்டாம் என ரோந்து வாகனம் வாயிலாக அறிவுறுத்தியும் கேட்பதாகயில்லை.மாச்சம்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகங்கள், ஆண்டாள் தோட்டம், காந்திஜி ரோடு மைதானம், பிள்ளையார்புரம், ஆத்துப்பாலம், போத்தனுார், மேட்டூரிலுள்ள கட்சி அலுவலகங்கள். கணேசபுரத்திலுள்ள ஒரு கோவில் பகுதி, மகாலிங்கபுரம் என குறிப்பிட்ட சில இடங்களில், இந்த 'தெனாவெட்டு' நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X