பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே ஏன் தங்க வேண்டும்? சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் விளக்கம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 வீட்டிலேயே ஏன் தங்க வேண்டும்? சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் விளக்கம்

கோவை;ஊரடங்கு உத்தரவின் போது விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் சென்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினம், வாகனங்களில் சென்றவர்கள் மீது, போலீசார் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வாகனங்களில் செல்வோரை தாக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான சரவணம்பட்டி போலீசார், கணபதி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விதிகளை மீறி சென்ற, 20க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தி, கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் விதம் குறித்தும், விரிவாக எடுத்துரைத்தார்.இதன் பின், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு, இலவசமாக முகக்கவசம் வழங்கினார். இதேபோல், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், விதி மீறி வாகனங்களில் சென்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X