பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்த வேண்டியவர்கள் 438 பேர்: கலெக்டர் அறிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோவை:''கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வழிகளில், கடந்த ஜன., முதல் மார்ச் வரை வந்த வெளிநாட்டு பயணிகள், வெளிநாடு சென்று வந்த, இந்திய பயணிகள் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது,'' என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார். தமிழக முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, நேற்று காலை முதல் மதியம் வரை, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்துக்குப் பின், கோவை கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும், தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கவும், முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.கர்ப்பிணிகள், ரத்த கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்.ஐ.வி., போன்ற தொற்று உள்ளவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிகள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர், அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில், 108ஐ தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று தமிழகத்துக்கு திரும்பியவர்கள் சுமார், 54 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அதில், கோவைக்கு விமானம், ரயில், பேருந்து உட்பட பல்வேறு வழிகள் மூலம் வந்தடைந்தவர்கள், 1,014 பேர்.இதில், 434 பேர் நம் கணக்கில் வந்துள்ளனர். விடுபட்ட 678 பேரின் முகவரிகளில் நேரடியாக சந்தித்து, அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்து, தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், 240 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 438 பேர் இன்றும், நாளைக்குள் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படுவர். இவர்களது வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதுடன், கைகளில் முத்திரையும் வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X