சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னந்தோப்பில் மலைப்பாம்பு மீட்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே, தென்னந்தோப்பினுள் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு புளியங்கண்டி அருகே தனியார் தோட்டத்தில், மலைப்பாம்பு இருப்பதாக, அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தோப்பில் மட்டைக்குள் பதுங்கியிருந்த, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை போராடி மீட்டனர். அதன்பின், நவமலை காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த சில நாட்களுக்கு முன், மழை பெய்த போது, மலைப்பகுதியில் இருந்து மலைப்பாம்பு அடித்து வரப்பட்டு தோப்பினுள் புகுந்திருக்கலாம். மலைப்பாம்பை கண்டால், வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X