பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணுக்கு வளம் சேர்க்கும் மண்புழு: பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.எந்த பயிர் சாகுபடி செய்தாலும், மண்ணின் வளத்தை பொறுத்துத்தான் மகசூல் கிடைக்கும். பயிர்கள் நன்கு செழித்து வளர, மண் வளம் மிகவும் அவசியம். இந்த மண் வளம் அதிகரிக்க, மண்புழு உரங்கள் மிகவும் சிறந்ததாகும். இதை உபயோகிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஒரு டன் மண்புழு உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய உரங்களை, ஒரு கிலோ வீதம் கலக்கி பயன்படுத்தலாம். உரங்கள் கலக்கிய பின், அதிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்காமல் தடுக்க,ஈரப்பதம் குறையாமல் கவனிக்க வேண்டும்.இந்த உரங்களை, மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். மண்புழு பெருக்கம் அதிகமாகி பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்கும்.மண்புழு உரத்தில், மண் புழுக்களின் முட்டைகள் மற்றும் சிறிய மண்புழுக்கள் இருப்பதால், அதிகளவு புழுக்கள் பெருகும். இப்படி உற்பத்தியாகும் மண்புழுக்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களின் வேர்களைத் தாக்கும் புழுக்கள், பூச்சிகளை உட்கொண்டு அவற்றை அழித்து மண்ணுக்கும் பயிர்களுக்கும் பலன் தருகிறது.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X