பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க்குகள் செயல்பட கட்டுப்பாடு; தமிழக அரசுக்கு கோரிக்கை

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020
Share
Advertisement
petrolbunk,TamilNadu,coronavirus,covid19,பெட்ரோல்_பங்க்கு,கொரோனா,வைரஸ்

சென்னை :பெட்ரோல் பங்க்குகள், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டும் செயல்படும் வகையில், கட்டுப்பாடு விதிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர், முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் மோடி, நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். பெட்ரோல் பங்க்குகள், அத்தியாவசிய சேவையின் கீழ் வருவதால், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, குறைந்த ஊழியர்களுடன், 24 மணி நேரமும் செயல்படுகின்றன.


latest tamil news




தனியார் வாகனங்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும், கட்டுப்பாடின்றி பெட்ரோல் பங்க்குகளுக்கு வருகின்றனர். அவர்களின் அஜாக்கிரதையால், நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டும் பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு விதித்திட வேண்டும். பால், காய்கறிகள் என, அரசு வரையறுத்துள்ள பிற சேவைகளின் பயன்பாட்டிற்கு மட்டும், 24 மணி நேர, பெட்ரோல், டீசல் விற்பனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என, தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X