பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி கமிஷன் மண்டிகள் 31ம் தேதி வரை அடைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகள், வரும், 31ம் தேதி வரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், ஏழு காய்கறி கமிஷன் மண்டிகள் உள்ளன. இங்கு, கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், உடுமலை, செஞ்சேரிமலை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து ஏலம் விட்டு செல்வது வழக்கம். 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிரப்பித்துள்ளன. இதையடுத்து, வரும், 31ம் தேதி வரை காய்கறி கமிஷன் மண்டிகள் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.காய்கறி கமிஷன் மண்டியினர் கூறியதாவது:தினமும் 12 கிலோ எடையுடன் கூடிய தக்காளி பெட்டிகள் குறைந்தது ஐந்தாயிரம் பெட்டிகள் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் எடுத்த பெட்டிகளை தரம் பிரித்து அடுக்கி வைக்க வேண்டும். மேலும், வியாபாரிகளும், விவசாயிகளும், உள்ளூர் கடைகாரர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புழங்கும் இடமாக உள்ளதால், நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.இதனால், வரும், 31ம் தேதி வரை தினசரி மார்க்கெட்டில் உள்ள ஏழு கமிஷன் மண்டிகள் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதிக்கு பின், அரசின் உத்தரவுகளை பொறுத்து, காய்கறி கமிஷன் மண்டிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X