பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மதிக்காமல் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்ய முடிவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

வால்பாறை:ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல், 'டூ வீலர்' வாகனத்தில், பறந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.வால்பாறையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம், ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய்த்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வால்பாறை நகருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி செல்லும் மக்கள், கை கழுவி செல்ல வசதியாக நகராட்சி சார்பில் ஐந்து இடங்களில் கை கழுவும் குழாய் மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.கேரள எல்லையில் இருந்து, வால்பாறைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மளுக்கப்பாறை செக்போஸ்டிலேயே திரும்பி அனுப்பப்பட்டது.நகராட்சி சார்பில் பயணிகள் நிழற்கூரை, அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும், நேற்று முன் தினம் முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை வால்பாறை நகரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் டூவீலரிலும், வாகனங்களிலும் சென்றனர்.வால்பாறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், வாகனங்களில் சென்றோரை தடுத்து நிறுத்தி, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்று எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X