பொது செய்தி

தமிழ்நாடு

இதென்ன விழா காலமா? சீட்டாட்டம், சேவல் கட்டு அமர்க்களம்!

Added : மார் 27, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை கிராமங்களில் ஊரடங்கை விடுமுறை கொண்டாட்டமாக மாற்றியுள்ளதால், நோய் பரவலை தடுக்கும் அரசின் நோக்கமே அர்த்தமிழந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் மட்டும் அதை பண்டிகை கால விடுமுறையை போல எடுத்துக்கொண்டுள்ளனர்.திருவிழாவை கொண்டாடி களிப்பது போல, விவசாய தோட்டங்களுக்கு செல்லும் ஆள் நடமட்டம் இல்லாத வழித்தடங்கள், பாறை மேடுகள், ஆற்றங்கரை புதர்களில் கூட்டமாக கூடி, சட்ட விரோத சேவல் சண்டை நடத்துகின்றனர்.மேலும் பலர், தோட்டத்துக்கு வீடுகளில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து, பணம் வைத்து சீட்டு விளையாடுகின்றனர். இது போன்ற இடங்களில், 'சில்லிங்' மது விற்பனையும் தாராளமாக நடக்கிறது.இவை தவிர, பல கிராமங்களில் வெளிப்படையாகவே இளைஞர்கள் கூடி கிரிக்கெட் விளையாடுகின்றனர்.கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் எவ்வித விழிப்புணர்வும் இன்றி, நோய் பரவலுக்கு வழிவகுக்கும் இது போன்ற செயல்களால், அரசு ஊரடங்கு அறிவித்த நோக்கமே முற்றிலும் அர்த்தமிழக்கிறது.அனைத்து பகுதிகளிலும், போலீசாரே ஆய்வு நடத்தி, இது போன்ற அத்துமீறல்களை தடுப்பது சாத்தியமற்றது. எனவே, அந்தந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் இது போன்ற அத்துமீறல்களை கண்காணிக்க வேண்டும்.தேவைப்பட்டால், அந்தந்த பகுதி போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். பொதுநலனில் அக்கறையுள்ள இளைஞர்களும், போலீசாருக்கு புகார் அளிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X