பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் கலக்கும் கழிவுநீர் :பொதுப்பணித்துறை ஆய்வு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் அருகே, பழைய ஆயக்கட்டு கால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்து, பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர்.அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில், பேக்கரி மற்றும் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கடந்த சில நாட்களாக, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு உட்பட்ட, வடக்கலுார் கால்வாயில் கலக்கப்படுகிறது. கால்வாயில் சட்ட விரோதமாக கழிவுநீர் கலப்பதை அறிந்த விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, கால்வாயில் கழிவுநீர் கலப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, பேக்கரி நடத்துபவர்களை அதிகாரிகள் எச்சரித்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், சுப்பேகவுண்டன்புதுார் ஊராட்சியிலும் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X