பொது செய்தி

தமிழ்நாடு

கோடை கால மரவள்ளி சாகுபடி: லாபம் கிடைப்பதால் ஆர்வம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு கிழக்கு பகுதி கிராமங்களான கோதவாடி, கோடங்கிபாளையம், கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம், பட்டணம் உட்பட பல கிராமங்களில் கோடை கால மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மரவள்ளி கிழங்கு குச்சி ஊன்றப்பட்டது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யப்பட்டது.மாதம் ஒரு முறை களை எடுக்கப்படுகிறது. இதற்கு எந்தவித பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால், பூச்சி மருந்து, உரம் போன்றவைகள் தேவையில்லை. மாட்டுச்சாணக் குப்பை மண் மட்டுமே போடப்படுகிறது. இன்னும், ஏழு மாதத்தில், மரவள்ளி கிழக்கு அறுவடைக்கு தயாராகி விடும்.கேரளாவில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு வாங்குவதால், அம்மாநில வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரில் வந்து, மரவள்ளி கிழங்குகளை பறித்து, அன்றைய மார்க்கெட் விலைக்கு கொள்முதல் செய்வார்கள். மரவள்ளி கிழங்கு சாகுபடியில் செலவு குறைவு என்பதால், விவசாயிகளுக்கு கணிசமான தொகை லாபமாக கிடைக்கும். இதனால், அதிகளவில் விவசாயிகள் கோடை கால மரவள்ளி கிழங்கு சாகுபடியை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X