பொது செய்தி

தமிழ்நாடு

இடுபொருள் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு : வேளாண் துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காரிப் சீசனுக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள் தடையில்லாமல், விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க, வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, வேளாண்துறை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், சுழற்சி முறையில் அலுவலர்கள், விவசாயிகளின் தேவைக்காக பணியில் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் மூலம், விதை இருப்பு, பரிசோதனை, தரம் பிரித்தல் மற்றும் விற்பனைக்கு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் தடையில்லாமல் நடக்க வேண்டும்.விதை உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து விதிமுறைகளின்படி, விதை உற்பத்தி செய்து, 'காரிப்' பருவத்தில், தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வது அவசியமாகும். அரசு உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி, உரம் விற்பனை மையங்கள் செயல்படலாம். விதை, உரம் ஆகியவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது மற்றும் இருப்பு வைத்தல் பணிகளின் போது, 'கொரோனா' தடுப்புக்கான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.'பாயின்ட் சேல்ஸ்' கருவியை பயன்படுத்தும் முன்பு, கைகளை கழுவ வலியுறுத்தி, விதை, உரம் விற்பனை மையங்களில், போதிய இடைவெளியில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய வசதிகளை செய்திருக்க வேண்டும்.வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்ந்த விற்பனையகங்கள், திறந்திருப்பதையும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதையும், அதிகாரிகள் உறுதி செய்யலாம்.தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் இணைந்து, காய்கறி மற்றும் சீசனுக்கான விளைபொருட்களை விவசாயிகள் உழவர் சந்தைகளில் சந்தைப்படுத்த வசதிகளை உருவாக்க வேண்டும்; அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் நகலுடன் கூடிய அனுமதி கடிதத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகளுக்கு வழங்கலாம்.ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வருபவர்கள், கைகளை கழுவுவதற்கான தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X