பொது செய்தி

தமிழ்நாடு

நீர் சிக்கனத்துக்கு 'ரெயின் கன்' பாசனம்: விவசாயிகள் கடைபிடிக்க 'அட்வைஸ்'

Added : மார் 27, 2020
Share
Advertisement
 நீர் சிக்கனத்துக்கு 'ரெயின் கன்' பாசனம்: விவசாயிகள் கடைபிடிக்க 'அட்வைஸ்'

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பலரும் தென்னைக்கு மத்தியில் கோகோ, ஜாதிக்காய், பாக்கு உள்பட பலவகை பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர்.சிலர், கோழிக்கொண்டை, சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளும் சாகுபடி செய்து உள்ளனர். கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களை பயன்படுத்தி, பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைப்பொழிவு அதிகமாக இருந்ததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் தற்போதும் போதிய அளவு நீர் உள்ளது.தற்போது, கோடை காலம் துவங்கி, நீராதாரங்களில் மெல்ல மெல்ல நீர்மட்டம் குறைந்து வருகிறது. கோடையை சமாளிக்க விவசாயிகள் பல்வேறு முறைகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம் அமைத்து, பயிர்களுக்கு நீர் பாய்ச்சி வருகின்றனர்.சிலர், 'ரெயின் கன்' பயன்படுத்தி தெளிப்பு நீர் பாசனம் செய்கின்றனர். கோடையை சமாளிக்க வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.வேளாண்துறையினர் கூறியதாவது:கோடை காலம் துவங்கி உள்ளதால், தென்னை, கோகோ, ஜாதிக்காய் போன்ற அதிக இடைவெளி உள்ள மரங்களில், சூரிய ஒளி மண்ணில் விழுந்து ஈரப்பதம் விரைவாக குறைகிறது.இதை தடுக்க மரங்களுக்கு அடியில், கழிவுகளைக்கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். மூடாக்கு மண்ணில் ஈரப்பதத்தை காப்பதுடன், கழிவுகள் மக்கிப்போய் பயிர்களுக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது.சொட்டு நீர் பாசனத்தில் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த, 'பட்டன்கள்' அமைத்து நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு தினமும் மண்ணில் ஈரப்பதத்தை பொறுத்து நீர் பாய்ச்சினால் போதுமானது.தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி எடுத்து, அதில், 200 கிலோ தென்னை நார் துகள் போட்டு, தென்னை ஓலை, மட்டை மூலம் மூடாக்கு அமைக்கலாம். இதில், 'கிளைரிசிடியா', அத்தி, எருக்கு, வேம்பு உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை வெட்டி, வட்டப்பாத்தியில் போட்டு, பெரும் அளவு ஈரப்பதத்தை காக்கலாம்.அதேபோல், மக்கிய சாணம், ஆட்டுக்கழிவு பயன்படுத்தலாம். தற்போதயை சூழலில் தென்னைக்கு ஒரு நாளுக்கு, 100 லிட்டர் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X