பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யணும்: அமராவதி ஆலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்;அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த, 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். ஆண்டு தோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர்.கரும்பு கொள்முதல் செய்யும் பகுதி, மடத்துக்குளம் நெய்க்காரப்பட்டி, பழநி, குமரலிங்கம், கணியூர், ஆகிய 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏப்., தொடங்கி செப்., வரை ஆண்டு தோறும் அரவைப்பருவமாகும். சராசரியாக, தினமும், 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் இங்கு உள்ளன. கடந்த ஆண்டு, 1.28 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.நடப்பாண்டு அரவைக்காக, நேற்று ஆலை கொதிகலனில் இளஞ்சூடு ஏற்றவும், இதனைத்தொடர்ந்து ஏப்., முதல் வாரத்தில் கரும்பு அரவை தொடங்கவும் அறிவிக்கப்பட்டது.தற்போது, கொரோனா வைரஸ் பரவியதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது. சிலர் ஒன்றாக கூடுவது கூட தவறு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், அமராவதி ஆலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'கொரோனா' பீதியில் உள்ளோம். இந்த நிலையில் பணியாற்றுவது மிகுந்த அச்சமாக உள்ளது. இது குறித்து அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X