பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்க திட்டம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ளது. உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. ரோட்டோரம் வசிக்கும் மக்கள், உணவுக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில் ஒரு சில தன்னார்வலர்கள், ரோட்டோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் வீடு இன்றி ரோட்டோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, 'சமுதாய சமையல் கூடம்' துவங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் கூறுகையில், ''பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ரோட்டோரம் ஆதரவற்று உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, 'சமுதாய சமையல் கூடம்' துவங்கப்படுகிறது.குஞ்சிபாளையத்திலுள்ள தன்னார்வலர் மூலம், உணவு தயாரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், 700 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.தடை உத்தரவு நடைமுறையில் உள்ள வரை, தொடர்ந்து உணவு வழங்கப்படும். இதற்காக தன்னார்வலர்கள் உதவி செய்வதாக உறுதியளித்தனர்,'' என்றார்.ஆலோசனை கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் அமர இருக்கை போடப்பட்டிருந்தது.குஞ்சிபாளையத்தில் தன்னார்வலர் சுகுமார், ஆதரவற்றோருக்கு வழங்குவதற்காக தயாரித்த உணவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சப் - கலெக்டர் ஆய்வு செய்தனர். அதன்பின், திட்டத்தை துவக்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X