பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கவசங்கள் கேட்டு கணக்கெடுப்பு புறக்கணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, ரேஷன்கார்டுதாரர்களுக்கு விலையில்லா பொருள்களும், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான கணக்கெடுப்பு பணி, பொள்ளாச்சி பகுதியில், ரேஷன்கடை பணியாளர்களால், நேற்று துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியை புறக்கணித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில், கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு உத்தரவால், மக்கள் வீடுகளுக்கு முடங்கியுள்ளனர். அவர்களை தேடிச்சென்று, வீடு வீடாக கணக்கெடுப்பது சிரமமான பணியாகும்.இப்பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக வினியோகிக்க வேண்டும், என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X