பொது செய்தி

தமிழ்நாடு

62 வீடுகளை தனிமைப்படுத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:தமிழகம் முழுவதும், கொரோனா பரவலை தடுப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு, கொரோனா வைரஸ் உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை தாலுகாவில், ஆனைமலை, கோட்டூர், அங்கலக்குறிச்சி பகுதிகளில் முதற்கட்டமாக, 14 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டன.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் கோட்டூர் சந்தைப்பேட்டை, மலையாண்டிபட்டணம், ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் மேலும், 14 வீடுகள், என, மொத்தம், 28 வீடுகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று முன்தினம், 14 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. தற்போது, 34 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்றியம் வாரியாக, பொள்ளாச்சி வடக்கில், 18 வீடுகள்; தெற்கில், 16 வீடுகள் கண்காணிப்பு செய்யப்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில், மொத்தம், 62 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X