பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல்களில் உணவு பார்சல் விற்பனை: தனியே வசிப்போர் நிம்மதி

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஓட்டல்களில் உணவு பார்சல் விற்பனை: தனியே வசிப்போர் நிம்மதி

பொள்ளாச்சி:ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொள்ளாச்சி ஓட்டல்களில், உணவு பார்சல் விற்பனை துவங்கியுள்ளது.கொரோனா பரவல் தடுப்புக்கு ஊரடங்கையொட்டி, தமிழகம் முழுக்க ஓட்டல்கள் மூடப்பட்டு, உணவு பார்சல் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலுக்கு ஏற்ப பொள்ளாச்சி ஓட்டல்கள் தங்கள் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டுள்ளன.வழக்கமான நாட்களை போலின்றி, மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டதால், ஓட்டல் வியாபாரம் கடுமையாக சரிந்துள்ளது. அதே சமயம், குடும்பத்துடன் இல்லாமல், தனியே தங்கியுள்ளவர்கள் உணவு இன்றி தவிப்பதை தவிர்க்க, ஓட்டல்கள் தொடர்ந்து உணவு தயாரித்து விற்பனை செய்கின்றன.பொள்ளாச்சி ஓட்டல்களில் வழக்கம் போல விதவிதமான உணவுகள் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக, பசியாற தேவையான அளவு, கலவை சாதங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன.முன்னணி ஓட்டல்களில், தக்காளி சாதம், தயிர் சாதம், ஊறுகாய், ஒரு பொரியல் ஆகியவை, பிரத்யேக பெட்டியில் அடைக்கப்பட்டு, ஓட்டலின் முகப்பில் வைத்து, ஒரு பெட்டி, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மருத்துவமனைகளில் சிகிச்சை்க்காக தங்கியுள்ளவர்கள், பஸ், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் வெளியூர்வாசிகள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த பார்சல் உணவு பெரிதும் கைகொடுக்கிறது.போலீசாருக்கு மதிய உணவு!பொள்ளாச்சியில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூரில் குடியிருக்கும் போலீசார், வீட்டில் சாப்பிட்டு சமாளிக்கின்றனர்.மற்றவர்களுக்கு வேளைக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதை கவனத்தில் கொண்ட, ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் சேவை அமைப்பினர், நேற்று போலீசாருக்கு மதிய உணவு வழங்கினர்.அமைப்பினர் கூறுகையில், 'போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பசியில் வாடாமல் இருக்க, சேவை அமைப்புகள் உணவு வழங்க முன்வர வேண்டும். இதற்கு, டி.எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு, முறையான முன் அனுமதி பெற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202020:29:10 IST Report Abuse
Ram Pollachi மீன் குழம்புடன் ஒரு சாப்பாட்டை முப்பது ரூபாயிக்கு சாப்பிட்ட மக்களுக்கு இந்த அளவு சாப்பாடு கையிருப்பை காலியாக்கிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X