பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளில் தொடர் கண்காணிப்பு!

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை;உடுமலை பகுதிகளில், 216 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. 'கொரோனா' நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க அரசு, தனியார் கல்லுாரிகள், விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலி தொடரை அறுக்கும் வகையில், ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.நகரம் மற்றும் கிராமங்களில், சுகாதாரப்பணிகள், கிருமி நாசினி தெளித்தல் என, அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து இந்நோய் பரவுவதால், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்படுகிறது.தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் முன்பு, 'கோவிட் 19/ கொரோனா தொற்று உள்ளே நுழையாதே; தனிமைப்படுத்தப்பட்ட வீடு', பெயர், முகவரி, குடும்ப நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் விவரங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த வீடுகளிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், தினமும் சுகாதாரத்துறை அலுவலர்களால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, வெளிநாடுகளிலிருந்து, உடுமலை நகராட்சி பகுதியில், 96 பேரும், உடுமலை ஒன்றியத்தில், 83 பேரும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 20 பேரும், குடிமங்கலம் ஒன்றியத்தில், 15 பேரும், மடத்துக்குளம் பேரூராட்சியில், 2 பேர் என, 216 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள், குறிப்பிடப்பட்ட நாட்களில் வெளியில் வரக்கூடாது; வீடுகளுக்குள்ளும் யாரையும் அனுமதிக்கக்கூடாது, என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி தினமும் கண்காணித்து வருகின்றனர்.அவர்கள் உடல் நிலை குறித்தும், 'கொரோனா' தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து தினமும் அறிக்கை வழங்கப்படுகிறது.அவசர கால தற்காலிக மருத்துவமனைகள் நோய்த்தொற்று பரவினால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகள், அங்குள்ள மாணவர் விடுதிகள், பள்ளி, கல்லுாரி அரசு மாணவர் விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், தொற்று பரவாமல் தடுத்தால், விரைவில் சகஜநிலை திரும்பும் வாய்ப்புள்ளது.தற்போது, வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது. தொற்று பரவினால், வரும் அனைவருக்கும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வைத்திருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை அரசுக்கல்லுாரி, அரசு மாணவர் விடுதிகள், தனியார் கல்லுாரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, விடுதிகளில் உள்ள படுக்கைகள் போதுமானதாகும். தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X