பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் சமூக இடைவெளி பராமரிக்க ஏற்பாடு

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை உழவர் சந்தையில், கூட்டம் சேருவதை தவிர்க்க, இடைவெளி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் வரிசையாக நின்று பொருட்கள் வாங்கிச்சென்றனர்.உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, காய்கறிகள் கொள்முதல் செய்ய பொதுமக்கள் அதிகளவு வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்கள் என்பதால், உழவர் சந்தை மூடப்படாமலும், 'கொரோனா' தொற்று பரவாமல், சமுதாய இடைவெளியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் ஒன்றரை மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், கடைகள் முன்பும், உழவர் சந்தை ரோட்டிலும், பிளீச்சிங் பவுடர் மூலம், அளவீடு செய்து குறியீடு அமைக்கப்பட்டது.நேற்று, அதிகளவு காய்கறிகளை பொதுமக்கள் வாங்க வந்திருந்த நிலையில், வரிசையாக காத்திருந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.வரத்து குறைவு; விலை அதிகரிப்பு உழவர் சந்தைக்கு, வழக்கமாக, 28 முதல், 30 டன் வரை காய்கறி வரத்து காணப்படும். 150 விவசாயிகள், 5 ஆயிரம் பேர் வரை நுகர்வோர் வரத்து இருக்கும். 'கொரோனா' ஊரடங்கு உத்தரவு காரணமாக, நேற்று, 75 விவசாயிகள் மட்டுமே, விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 18 டன் மட்டுமே காய்கறி வரத்து காணப்பட்டது. நுகர்வோர் வருகையும், 2 ஆயிரமாக குறைந்தது.நேற்று கத்தரி கிலோ, 20 முதல், 24 ரூபாய் வரையும், வெண்டை, 25 முதல், 30 வரையும், தக்காளி, 10 முதல், 15 வரையும் விற்றது.அவரை, 20 முதல் 30 ரூபாய் வரையும், புடலங்காய், 15 முதல், 20 ரூபாயும், பீர்க்கங்காய், 20 முதல், 28 வரையும், சுரைக்காய், 10 முதல், 12 வரையும், பாகற்காய், 20 முதல் 25 வரையும், கொத்தவரங்காய், 30 வரையும், பச்சை மிளகாய், 20 முதல் 30 வரையும், சின்ன வெங்காயம், 85 முதல், 95 வரையும், பெரிய வெங்காயம், 34 முதல், 36 வரையும் விற்றது.முருங்கைக்காய், 20 முதல், 28 வரையும், தேங்காய், 35 முதல் 38 வரையும், உருளைக்கிழங்கு, 36 முதல் 40 வரையும், கேரட், 55 முதல் 58 வரையும், பீட்ரூட், 14 முதல் 16 வரையும், முட்டைக்கோஸ், 24 வரையும், கொத்தமல்லி தழை கிலோ, 40 முதல், 50 வரையும், புதினா, 40 முதல், 50 வரையும், கருவேப்பிலை, 45 முதல், 70 வரையும் விற்றன.எலுமிச்சை, 45 முதல், 75 வரையும் விற்றன.காய்கறிகளின் கடந்த 3 நாட்களாக கிலோவுக்கு, 10 ரூபாய் வரை உயர்ந்தது. வெங்காயத்தின் விலை, 40 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X