பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை;உடுமலை ஆண்டியகவுண்டனுாரில் 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீடுகள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கும் தீவிர நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.உடுமலை ஒன்றியத்திலுள்ள கிராமங்களில், கைகளை சுத்தமாக வைக்க வேண்டும், என பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு முகாம்கள் சில நாட்களுக்கு முன்பு வரை நடத்தப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிப்பதும் பின்பற்றப்பட்டது. தற்போது, வைரஸ் பரவுதல் அதிகரித்து வருவதால், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.இருப்பினும், சுகாதாரம் மற்றும் துாய்மைப்பணிகள் நாள் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.ஊராட்சிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு சிறிய அளவிலான 'கேன்'கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால், ஒரு நாளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே தெளிக்க முடிகிறது. பணியாளர்களின் நலன் மட்டுமின்றி, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், தண்ணீர் தொட்டி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறை பின்பற்றுகின்றனர்.ஊராட்சித்தலைவர், மோகனவள்ளி, துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து, ஆயிரம் லிட்டர் அளவுள்ள தண்ணீர் 'கேனில்' கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், தற்போது அனைத்து பகுதிகளிலும், வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிப்பதற்கு இந்த ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர்.ஜக்கம்பாளையம், உரல்பட்டி, கிழுவன்காட்டூர், அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, சந்தைபேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், ஊராட்சி நிர்வாகத்தினர் நேரடியாகச்சென்று ஆய்வு செய்து, பணியாளர்களுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X