பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்: களம் இறங்கிய தன்னார்வலர்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை:ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், உடுமலை பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது.'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் பொதுமக்கள் வருகை தடை பட்டுள்ளதால், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை, 'ைஹயர் கூட்ஸ் அசோசியேசன்' சார்பில், தினமும், 200 பேருக்கு உணவு சமைத்து, பார்சல் கட்டப்படுகிறது. வாகனம் மூலம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களை கவனித்து வரும் உறவினர்கள், சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது.அதே போல், வள்ளலார் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X