சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

உடுமலை:ஊரடங்கை மீறியவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஏப்.,14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்திய நிலையிலும், பலர் வழக்கம் போல் ரோடுகளில் சுற்றி வந்தனர்.நேற்றுமுன்தினம், வாகனங்களை நிறுத்தி, அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். நேற்றும், கார் மற்றும் பைக்குகளில் பலர் சுற்றி வந்தனர். ரோடுகளை மறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மருத்துவம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X