பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தல்: முடங்கிய வியாபாரம் வங்கிகள் நெருக்கடிக்கு தீர்வு காண உறுதி

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்யும், பெண் வியாபாரிகள், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலஅவகாசம் கேட்டுள்ளனர்.ஊட்டி நகரில், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு நகராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் ஏராளமானோர் பல் பொருள் அங்காடி கடை, நடைப்பாதை வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்த வியாபாரிகள் தினசரி கிடைக்கும் வருமானத்தில் கூட்டுறவு, மத்திய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். 'கொரோனா' அச்சத்தால் கடந்த, 17ம் தேதி முதல் சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால், வியாபாரம் ஸ்தம்பித்தது.வியாபாரம் இல்லாததால் வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் திணறினர். ஆனால், கடன் கொடுத்த சில தனியார் வங்கிகள், கடன் பெற்ற வியாபாரிகளுக்கு கடன் தொகையை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுள்ளது. அதில், சிலர் கலெக்டரிடம் மனு அளித்து பிரச்னைகளை கூறி உள்ளனர். 'இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,' என, அவரும் உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X