பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

Added : மார் 27, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார் நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, வாகனம் மூலம், 'சோடியம் ஹைப்போ குளோரைட்' தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மாவட்டத்தில், கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நகராட்சி கமிஷனர் பாலு, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு துறையினர், நகராட்சி ஊழியர்கள் குன்னுார் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், மவுன்ட் ரோடு , மார்க்கெட், உள்ளிட்ட மக்கள் நடமாட்ட பகுதிகளில் தொடர்ந்து, கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.நகராட்சி நகர் நல அலுவலர் ரகுநாதன் கூறுகையில்,''ஒரு லிட்டர் தண்ணீரில், 32 கிராம் 'ப்ளீச்சிங் பவுடர்' கலந்து ஒரு மணிநேரம் வைத்து, மேலே நிற்கும் 'சோடியம் ஹைப்போ குளோரைட்' கிருமி நாசினியை நகர் முழுதும் தெளித்து வருகிறோம். மக்கள் தங்கள் வீடுகளில் இதே போன்று தயாரித்து தெளிக்கலாம்ல,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X